/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1391.jpg)
1986 ஆம் ஆண்டு அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜி.எம் குமார், அடுத்தாகபிக்பாகெட், உருவம், இரும்பு பூக்கள் என்று அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே சில படங்களுக்கு கதை ஆசிரியராகஇருந்த ஜி. எம் குமார் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கேப்டன் மகள் படத்தின்மூலம் திரையுலகில் நடிகராகவும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவன் இவன், குருவி, வேலையில்லா பட்டதாரி, கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜி.எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)